ETV Bharat / state

100 சவரன் நகைகள், 5 ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணை கொடுமை; உயிரை மாய்த்த மனைவி: கணவருக்கு 10ஆண்டுகள் சிறை - திருமணமான ஒன்பது மாதங்களில் பெண் உயிரிழப்பு

திருமணமான ஒன்பது மாதங்களில், வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

100 சவரன் நகை, 5 ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணை கொடுமை; உயிரை மாய்த்த மனைவி...கணவருக்கு 10 ஆண்டு சிறை

author img

By

Published : Sep 13, 2022, 7:10 PM IST

சென்னை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராவுலபாலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரசன்னா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவருக்கும் 2012 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது, 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் சென்னையில் வேலை கிடைத்ததால், குமாரசாமி தனது மனைவியை அழைத்து வந்து வேளச்சேரியில் வசித்து வந்துள்ளார். அப்போது கூடுதல் நகையும், பணமும் வரதட்சணையாக கேட்டு லட்சுமி பிரசன்னாவை துன்புறுத்திய குமாரசாமி, அவரை வீட்டில் பூட்டி வைத்தும் சித்ரவதை செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த லட்சுமி பிரசன்னா, 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, குமாரசாமிக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டியது, வரதட்சணை கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வேளச்சேரி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக், வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து, லட்சுமி பிரசன்னாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, தற்கொலைக்குத் தூண்டியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரது கணவர் குமாரசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அபராதத் தொகையில் 10 ஆயிரம் ரூபாயை உயிரிழந்த பெண்ணின் தந்தைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜியா கான் தற்கொலை வழக்கு: மறுவிசாரணை மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.