அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் அருணா. இவர் டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவரது மாமனார் சுந்தரம், மாமியார் சரோஜா ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து அருணாவை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர்.
பின்னர் போளூர் செல்ல இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்லும் பேருந்திற்குள் அமர்ந்து இருந்தனர். நீண்ட நேரமாக பேருந்து எடுக்காததால் சுந்தரம் பேருந்து ஓட்டுநரிடம் முறையிட்டுள்ளார். பின்னர் இருக்கைக்கு வந்து பார்த்தபோது தனது பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் 10 சவரன் நகை, அடையாள அட்டைகள் இருந்துள்ளது.
இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.எம்.பி.டி.காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.