சென்னை ராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4688887_court.jpg)
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோயிலுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; கோயில் நிலத்தில் மூன்று அடுக்கு கொண்ட கட்டடம் கட்டப்பட்டிருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவல் துறையின் உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க : குறைவான மதிப்பெண்கள் பெற்ற செவிலியர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கத் தடை!