ETV Bharat / state

நகரமயமாக்கல் காரணமாக கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு -  உயர் நீதிமன்றம் - Madras High Court

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Etv Bharatநகரமயமாக்கலால் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Dec 30, 2022, 9:57 AM IST

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோயிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்துள்ள தீர்ப்பில், "மக்கள் ஒரு காலத்தில் தங்களது சொத்துகளை கோயிலுக்கு தானமாக அளிக்கும் பழக்கம் இருந்ததது. கோயில் சொத்துகளை அபகரிப்பது அல்லது சுரண்டுவது பெரும் பாவமாக மக்கள் கருதினர். அது அவர்களுக்கு பயத்தை அளித்தது. ஆனால், இப்போது அப்படியில்லை.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதல் காரணமாக அந்த பயம் அற்றுப்போய் விட்டது. கோயில் சொத்துகளை எந்த வித குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் ஆக்கிரமிக்கப்படுகிறது. அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:2023 இறுதிக்குள் ஹைட்ரஜன் ரயில் சேவை - மத்திய அரசு இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.