கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக, ஊடகங்களின் வாயிலாக மக்களை அவ்வப்போது சந்தித்து கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது செல்போன்களின் காலர் டியூன் வழியாக விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறார்.
ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல். ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன்கள் தங்களது நிறுவனங்களின் காலர் டியூனாக முதலமைச்சரின் கரோனா விழிப்புணர்வு வாசகத்தினை வைத்துள்ளன. முன்னாக, சுகாதாரத் துறை சார்பாக வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்பொலி (ஆடியோ) பதிவு காலர் டியூனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’கொரோனா காலர் ட்யூன் எரிச்சலை ஏற்படுத்துகிறது’ - தடைசெய்யக் கோரி வழக்கு!