தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப். 6) காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில், தெலங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
இது குறித்து தமிழிசை ட்விட்டரில், "சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினைப் பதிவுசெய்தேன். தகுதியான அனைவரும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி தங்களது வாக்கினைப் பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றினார் சூப்பர் ஸ்டார்