ETV Bharat / state

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் நடிகர் பாக்யராஜ் சந்திப்பு

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில், தனக்கு ஆதரவு வழங்கக் கோரி  நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், தனது அணியினரோடு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் நடிகர் பாக்யராஜ் ஆதரவு
author img

By

Published : Jun 14, 2019, 10:13 AM IST

Updated : Jun 14, 2019, 10:42 PM IST

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக, சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவரும் இயக்குநருமான நடிகர் பாக்யராஜ் தனது அணியினருடன் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாக்யராஜ் கூறுகையில்,

"விஜயகாந்தை முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில்தான் அவரை நாங்கள் நேரில் சந்தித்து ஆதரவு பெற்றோம். நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும். மேலும் நடிகர் கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் நடிகர் பாக்யராஜ் ஆதரவு

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் நாடகக் கலைஞர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளோம். நடிகர் சங்க கட்டடத்தை தலைவர் விஷால் அவருடன் இருப்பவர்களும் கூட கட்டி முடிக்க முன்வரவில்லை. எனவே இதற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தலில் நிற்கிறோம். இந்தத் தேர்தலில் அரசியல் கட்சியின் தலையீடு என்பது எதுவுமில்லை" என்று கூறினார்.

அப்போது நடிகர் பிரசாந்த், இயக்குநர் ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள் உடன் இருந்தனர்.

Intro:nullBody:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் நடிகர் பாக்யராஜ் ஆதரவு.

நடிகர் சங்க தேர்தலில் ஆதரவு தரக் கோரி சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது அணியினர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்தனர்.

பின்னர் செச்ச்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ், " முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றோம். எங்கள் அணி கண்டிப்பாக ஜெயிக்கும் என்று அவர் தெளிவாக கூறினார். மேலும் நடிகர் கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆதரவை கோரவுள்ளோம்.

நாடக கலைஞர்களுக்கு பணம் தருவோம் என்று கூறியது வாக்குக்காக அல்ல. அவர்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும் போது கஷ்டத்தில் இருக்கிறோம் என்று கூறுவார்கள் அப்போது பணம் அளித்து உதவுவோம் என்பதை தான் கூறினேன். வாக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர்கள் கஷ்த்தை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளோம்.

நடிகர் சங்க கட்டடத்தை தலைவரும் அவருடன் இருப்பவர்களும் கூட கட்டி முடிக்க முன்வரவில்லை. எனவே இதற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தலில் நிற்கிறோம். இந்த தேர்தலில் அரசியல் கட்சியின் தலையீடு என்பது எதுவுமில்லை" என்று கூறினார்.
Conclusion:null
Last Updated : Jun 14, 2019, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.