ETV Bharat / state

சென்னையில் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.. 140 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி! - chennai news

chennai teachers protest: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உடன் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுள் 140 ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 5:52 PM IST

தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெயில், மழை என பாராமல் தொடர்ந்து 4-வது நாளாக இன்று (அக்.1), போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உடன் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 140க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஜனவரி ஒன்றாம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவித்த ஊதிய முரண்பாட்டை களைவதற்காக குழுவை அமைத்து, அதன் அடிப்படையில் அறிக்கையை பெற்று மூன்று மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டுகள் களையப்படும் என 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது அறிவித்திருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதி 311-ன்படி, இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதே, இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311 இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு, சம ஊதியம்" வழங்க வேண்டும். 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூபாய் 8 ஆயிரத்து 370 என்றும், அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 200 என்றும் "ஒரே பணி, ஒரே கல்வி தகுதி" என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனை சரி செய்ய வேண்டுமென போராட்டம் நடத்திய போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311 ல் 20ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு, சம ஊதியம்" வழங்கப்படும் எனக் கோரிக்கையை இடம் பெறச் செய்தார். திமுக அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழக முதல்வர் 2023ஆம் ஆண்டின் புத்தாண்டில், முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார். கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை முடிவுக்கு வந்தது. ஆனால் ஏனோ அரசு வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை. இதனால் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். எங்களின் ஒற்றை கோரிக்கையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் கை குழந்தைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இந்தப் போராட்டத்தில் பங்குபெற்ற, சுமார் 140 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், "2009 ஆம் ஆண்டுக்கு ஜூன் 1 ஆம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பது குறித்து நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஊதிய முரண்பாடுகளை களைவதில் இத்தனை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. நியாயமான பதில் கிடைக்கும் வரை நிச்சயம் உண்ணாவிரத போராட்டம் தொடரும். எங்களின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் அவகாசம் தருவதில் பிரச்சனை இல்லை. இதே கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தெரிவித்துள்ளோம்.

ஏற்கனவே 14 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்னும் கால அவகாசம் கேட்கின்றனர். ஏற்கனவே போராட்டத்தின் போது மூவர் குழு அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களில் பதில் அளிக்கப்படும் என்றனர். ஒன்பது மாதங்களாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எந்த தேதியில் எங்கள் கோரிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். முதல்வர் தேதியை அறிவித்தால் போராட்டத்தை கைவிடுவோம்.

எங்கள் நியாயமான கொள்கையை அரசு அதிகாரிகள் அனைத்து விதத்திலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஆகிறது. இன்றே கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி கேட்கவில்லை. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தாவது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.