ETV Bharat / state

பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளிகளில் பதினோராம் வகுப்பில் மாணவர் சேர்க்கை கரோனா தொற்று குறைந்த பின்னர் தொடக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை
author img

By

Published : Jun 14, 2021, 2:56 AM IST

சென்னை: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மனோகரன், பள்ளிக்கல்வித்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ’தலைமையாசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு 14ஆம் தேதி முதல் வரவேண்டும். பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையும் நடத்த வேண்டுமென அறிவிப்பு வந்துள்ளது. புத்தகம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களையும் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதில் தெளிவான நிலை இல்லை. பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.

ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. தலைமை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் பெண்களாக இருக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாகும்.

மேலும் மாணவர் சேர்க்கையை, ஆசிரியர்கள் அனைவரும் இருந்து கலந்து நடைமுறைப்படுத்துவது தான் வழக்கமாகும். ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதைப் போலவே, மாணவர்களும் தங்கள் பெற்றோரும் பொதுப்போக்குவரத்து இல்லாமல் பள்ளிக்கு வந்து செல்வது கடினம். மேலும் மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றும் வழங்க வேண்டியுள்ளது.

இந்தப் பணிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்போடு நடைபெற வேண்டுமென்றால், தொற்று குறைந்து ஊரடங்கும் முடிவுக்கு வரவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். அதன் பின் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பதுதான் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும். மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி திறப்பை சுமுக நிலை வந்தபிறகு தொடங்க அனுமதித்து அறிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 14,016 பேருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.