ETV Bharat / state

ஒரே சுற்றறிக்கையால் குழப்பத்தை தீருங்கள் - ஆசிரியர்கள் சங்கம் - சென்னை அண்மைச் செய்திகள்

பள்ளிகள் திறப்பின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, தனித்தனி சுற்றறிக்கைகள் அனுப்பி ஆசிரியர்கள், மாணவர்களைக் குழப்பாமல், ஒரே சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் சங்கம்
ஆசிரியர்கள் சங்கம்
author img

By

Published : Aug 25, 2021, 6:34 PM IST

Updated : Aug 26, 2021, 6:02 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது பள்ளிகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அவ்வாறு வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் வெவ்வேறு மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவதால் பெற்றோர், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

குழப்பும் சுற்றறிக்கைகள்

இதுகுறித்து தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசுகையில், “செப்டம்பர் 1ஆம் தேதி முதல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதனை முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால், பள்ளிகள் திறப்பு குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு மாதிரியான அறிவிப்புகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிடுகின்றனர்.

அவற்றில் கூறப்படும் தகவல்களும், அறிவுரைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. இதனால் ஆசிரியர்களிடையே குழப்பங்கள் ஏற்படுகின்றன.

ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் பேசும் காணொலி

ஒரே சுற்றறிக்கையில் பாதுகாப்பு நடைமுறைகள்

கடந்த ஆண்டைப் போலவே தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஒரே சுற்றறிக்கை மூலம் தெரிவித்தால் குழப்பங்களை தவிர்க்க முடியும். அதனை பின்பற்றுவதும் எளிதாக இருக்கும்” என்றார்.

பள்ளிகள் திறப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் காத்திருக்கும் நிலையில், குழப்பங்களை ஏற்படுத்தும் நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர் மீது நடவடிக்கை

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் பேசுகையில், “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பின் போது அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆசிரியர்களின் தார்மீக கடமை. அதே நேரத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரி சுற்றறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் அறிக்கை குழப்பமாக இருக்கிறது.

எனவே பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஒரே அறிவிப்பாக வெளியிட வேண்டும். பள்ளிகள் திறப்பதை வரவேற்கிறோம். மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் தேக்கநிலை உள்ளதால் விரைந்து பள்ளிகளை திறக்க வேண்டும். அதேபோல் ஆரம்பக் கல்வியையும் திறக்க வேண்டும்.

மாணவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை

மாணவர்களுக்கான நோய் தடுப்பதற்கான முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும். மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்கு வருகை தராமல் இருப்பதால் தொய்வடைந்து காணப்படுகின்றனர்.

ஆகையால் மன ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய, பள்ளிகள் தோறும் மனோதத்துவ ஆலோசகர்கள் குழுவை வரச் செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா? - பேரவையில் விவாதம்

Last Updated : Aug 26, 2021, 6:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.