ETV Bharat / state

அக்16 முதல் எமிஸ்-இல் புள்ளி விபரத் தகவல்களை பதிவு செய்ய முடியாது: ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு! - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

EMIS Teachers issue: பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான தகவல்களை எமிஸ்-இல் பதிவு செய்ய முடியாது என தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

teachers association said they do not register statistical information in emis for school education department
பள்ளிக்கல்வித்துறைக்கு புள்ளி விபரத் தகவல்களை பதிவு செய்ய முடியாது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 8:45 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்ய முடியாது என தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் திமுக அரசு கொண்டுவந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் (டிட்டோ ஜாக்) கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது. கரோனா தொற்றினால் கற்றலில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் பாதிப்புகளை சரி செய்வதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த திட்டத்தினால் மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையால் கேட்கப்படும் தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மட்டுமே தங்களின் நேரம் முழுவதும் செலவிடப்படுகிறது எனவும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் கற்றல் அடைவுத் திறன் சோதனை என்றப் பெயரில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வினால் கற்பிக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி, எண்ணும் எழுத்தும் பயிற்சி போன்றவை அளிக்கப்படும் போது, ஈராசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் பணிகள் முற்றிலும் தடைப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறைக்கு புள்ளி விபரம் தரும் பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், வரும் 13-ஆம் தேதி போராட்டமும் நடத்த உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை முழுமையாக மேற்கொள்ள இயலாத வகையில் ஆன்லைன் பதிவேற்றங்கள் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி நேரத்தை அபகரித்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடத்திய சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இது தாெடர்பாக அனைத்து சங்கங்களும் தெளிவுபடுத்தியுள்ளோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்கள் ஆன்லைன் பதிவேற்றப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பினை வெளியிட்டார். ஆனால் இன்றுவரை ஆசிரியர்கள் பதிவேற்றப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

மேலும், ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என அதில் கூறியுள்ளனர். எண்ணும், எழுத்தும் திட்டத்தில் செல்போன் அப்ளிகேஷன் மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும், செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும், கிராமப்புறங்களில் NET WORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு, ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும், EMIS, TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக் கொள்வது என டிட்டோ ஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

மாணவர் வருகை, ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை வரும் 16-ஆம் தேதி முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கின்றனர் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்கள் முதல் வாச்சாத்தி தீர்ப்பு வரை.. முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த கோரிக்கை மனு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.