சென்னையில், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் கருப்பசாமி கலந்தாய்விற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், "2019-2020ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க- நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணிநிரவல், பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பணி மாறுதலுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஒப்படைக்க வேண்டும். மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்பொழுது பணிபுரியும் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
அதனை உறுதி செய்யப்பட்ட பின்னரே அந்த ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். மனமாெத்த மாறுதல் கேட்கும் இரண்டு ஆசிரியர்களும் தற்பொழுது பணிபுரியும் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
அலகு விட்டு அலகு மாறுதல் (தொடக்கக் கல்வித் துறையில் இருந்து பள்ளிக்கல்வி, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நலத் துறை, கள்ளர் சீரமைப்புத் துறை) பிறத் துறைக்கு மாறுதல் பரிசீலிக்கப்படாது. எனவே கண்டிப்பாக அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பத்தை பெறக் கூடாது" உள்ளிட்ட வழிமுறைகளைக் கூறியுள்ளார்.