ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு நேரடி முறையில் சென்ற 21ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தத் தேர்வானது அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.
கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ஆன்-லைன் வழியில் தேர்வு நடைபெறுகின்றன. இந்நிலையில் அதேபோன்று ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் திடீர் என ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி தேர்வு மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடத்தப்படுகிறது. அரசின் இந்த முரண்பாடான நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தனர்.