ETV Bharat / state

மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு- டிஆர்பி தலைவர் தகவல்! - சென்னை

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2ல் 15,297 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Teacher Examination Board Chairman said secondary graduate teachers competitive examination announced soon
விரைவில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு அறிவிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்
author img

By

Published : Apr 3, 2023, 11:22 AM IST

Updated : Apr 3, 2023, 4:16 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்(TET PAPER 1) முதல் தாளை எழுதிய 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 நபர்களில், 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாவது தகுதித் தேர்வான தாள் இரண்டை எழுதியவர்களில் 15,297 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் அதாவது தேர்வு எழுதியவர்களில் 6 விழுக்காடு மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கான ஆசிரியர் பணிக்குரிய போட்டி தேர்வு அரசாணை 149-இன் படி நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) தயாராகி வருகிறது. இந்தப் போட்டி தேர்விற்கான அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில் கூறிய பாடத்திட்டங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டினை எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 856 பேர் பகுதி பெற்று அவர்களுக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும் தேர்வு கூட தேர்வு சீட்டு வழங்கும்போது தகுதியற்ற 30 நபர்களுக்கு வழங்காமல் நிறுத்திவைத்தது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வினை 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் எழுதியுள்ளனர் என தெரிவித்துள்ளது. பதிவு செய்த ஹால் டிக்கெட் பெறுவதற்கு தகுதி பெற்ற ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 எழுதாமல் இருந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்(பொறுப்பு) நந்தகுமார் கூறும்போது, "ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வினை பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் 23 பிரிவுகளாக பிரித்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வினை 2,54,224 எழுதினார்கள். விடைகள் மீது தேர்வர்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இணையதளத்தில் 16,409 நபர்கள் 1,364 வினாக்கள் மீது தங்களின் சந்தேகங்களை பதிவு செய்தனர். சந்தேகங்கள் வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் தனித்தனியாகவும் அனைத்து தேர்வுகளின் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அந்த தேர்வில் 15 ஆயிரத்து 297 தகுதி பெற்றுள்ளனர்" என்றார்.

மேலும் "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டார கல்வி அலுவலர், கல்லூரி உதவி பேராசிரியர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்து அறிவிப்புகள் மே மாதத்திற்குள் வெளியிடப்பட உள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான பாடத்திட்டம் உயர்கல்வி துறையால் இறுதி செய்யப்பட்டுள்ளது அதுவும் விரைவில் வெளியிடப்படும் எனவும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 10,000 காலி பணியிடங்கள் உள்ளன எனவும் அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோட்டையை முற்றுகையிடும் ஜாக்டோ-ஜியோ.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி!

Last Updated : Apr 3, 2023, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.