இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேசிய ஆசிரியர் கல்விக் குழு வரையறுத்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில், மாநில அரசு நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என தேசிய கல்வி குழுமம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் மூன்று முறை தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டதோடு, கூடுதலாக 4ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 1500 ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெறவில்லை. இதனால் கூடுதல் அவகாசம் வழங்கியும், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு காலநீடிப்பு வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.