ETV Bharat / state

12ஆம் வகுப்புவரை சத்துணவு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை! - தியாகராஜன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தேக பேட்டி

சென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்புவரை சத்துணவு திட்டத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

teacher association
teacher association
author img

By

Published : Dec 4, 2019, 9:42 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த பிரத்தேக பேட்டியில், ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடத்தப்படவுள்ள பொதுத் தேர்வை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் தற்போது வழங்கப்படுவதைவிட தரமான அரிசி, சத்தான காய்கறிகளை கொண்டு மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் தரமான உணவு வழங்கிட வேண்டும். தற்போது பத்தாம் வகுப்பு வரை வழங்கப்படும் சத்துணவு திட்டத்தினை 12ஆம் வகுப்பு வரை நீட்டித்து வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசுப்பள்ளிகளை பாதுகாக்கவும் அடுத்த பத்தாண்டுகளுக்கு புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறினார்.

ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர் சந்த்திப்பு

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் நலன் கருதி பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

எனவே மாணவர் நலன் சார்ந்த 20 அம்ச கோரிக்கைகளை மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலரிடமும், மாநில அளவில் இயக்குனர்களிடம் அளித்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளை உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவதற்குள் நிறைவேற்றவேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்தவுடன் முழுவதும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது

Intro:சத்துணவு திட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிக்க கோரிக்கை

Body:சென்னை,

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்புவரை சத்துணவு திட்டத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது, ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடத்தப்படவுள்ள பொதுத் தேர்வை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் தற்போது வழங்கப்படுவதை விட தரமான அரிசி, சத்தான காய்கறிகளை கொண்டு மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் தரமான உணவு வழங்கிட வேண்டும். தற்போது பத்தாம் வகுப்பு வரை வழங்கப்படும் சத்துணவு திட்டத்தினை பன்னிரண்டாம் வகுப்பு வரை நீட்டித்து வழங்க வேண்டும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டத்தில் காலையில் சத்தான பாலுடன் கூடிய சிற்றுண்டி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடை அந்த மாணவரின் அளவிற்கேற்ப அளவெடுத்து தைத்து வழங்க வேண்டும்.
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசுப்பள்ளிகளை பாதுகாக்கவும் அடுத்த பத்தாண்டுகளுக்கு புதிதாக தனியார் பள்ளிகள் துவங்க அரசு அனுமதி வழங்கக்கூடாது.

மாணவர்களின் நலன் கருதி பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
எனவே மாணவர் நலன் சார்ந்த 20 அம்ச கோரிக்கைகளை மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலரிடமும், மாநில அளவில் இயக்குனர்களிடம் அளித்துள்ளோம்.

எங்களின் கோரிக்கைகளை உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவதற்குள் நிறைவேற்றவேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்தவுடன் முழுவதும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.