ETV Bharat / state

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர்.. - தியாகராஜன்

முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர்களின் நலனுக்காக அறிவித்த கோரிக்கைகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர்

author img

By

Published : Mar 1, 2023, 6:14 PM IST

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளில் ஆசிரியர்களின் நலனுக்காக மூன்று கோரிக்கைகளை அறிவித்துள்ளது போல், பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாணவரின் கல்விக்காக அயராது பாடப்பட்டு வரும் ஆசிரியர் சமூகத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தது குறித்து பேசினார்.

தொடர்ந்து ஆசிரியர்களின் உடல்நலத்தை காக்க அனைத்து ஆசிரியர்களும் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் எனவும், உயர் கல்வி பயிலும் ஆசிரியரின் குழந்தைகளுக்காக ஆண்டிற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் அரசு நலத்திட்டங்களை மாணவர்களே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது என்றும் அதற்கு முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தார். அதேபோல் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் நிறைவேற்றிய தர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.

இதையும் படிங்க: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.