ETV Bharat / state

மதுபானக் கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது!

சென்னை: மதுபானக் கடையின் கதவை உடைத்து 15 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tasmac theft
Tasmac theft
author img

By

Published : Mar 6, 2020, 6:49 PM IST

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, 15 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுபானக் கடையின் மேலாளர் சங்கர் கணேஷ் என்பவர் அளித்தப் புகாரின் பேரில், மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த சிவா (எ) குபேந்திரன் (44) என்பவரை, மதுபானக்கடையில் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறி, காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட மதுபானக் கடை

அதில், அவர் மதுபானக் கடை உட்பட அடையார், திருவான்மியூர் ஆகியப் பகுதிகளில் உள்ள கடை, வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 12 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா தொழிற்சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.