ETV Bharat / state

மதுபானங்கள் விலை உயர்வு: மதுப்பிரியர்கள் கவலை

சென்னை: டாஸ்மாக் கடையில் மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளதாக மதுப்பிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுபானங்கள் விலை உயர்வு
மதுபானங்கள் விலை உயர்வு
author img

By

Published : Aug 18, 2020, 6:02 PM IST

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து மே 7ஆம் தேதி முதல் சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சென்னையில் நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அரசு உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று (ஆக.18) காலை முதல் திறக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள பகுதியில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் மட்டும் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அதிலும் மது வாங்குவதற்கான நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக மதுப்பிரியர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. தடுப்பு கம்பங்கள் அமைத்து, அவர்களுக்கு தனி மனித இடைவெளியைப் பின்பற்ற கோடுகள் வரையப்பட்டிருந்தன. இதனிடையே மதுப்பிரியர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, விற்பனை தொடங்கியுள்ள நிலையில், மதுபானங்களின் விலை 20 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மதுப்பிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.