சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததற்காகவும், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்தமைக்காகவும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த விவசாயிகள், பாரம்பரிய நெல் வகைகளால் அலங்கரிக்கப்பட்ட நெல் கதிர் கொத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
மேலும், நம்மாழ்வார் பெயரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், அனைத்து வகை விவசாயிகளுக்கும் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் விவசாயிகள் சங்கத்தினர் முன்வைத்தனர்.
இதையும் படிங்க:என்றும் மார்க்கண்டேயன் எங்கள் முதலமைச்சர் - பொதுமக்கள் புகழாரம்