ETV Bharat / state

'மின் இணைப்புகளில் பெயர் மாற்ற சிறப்பு முகாம்'; மின்சார வாரியம் அறிவிப்பு - ஜூலை 24 முதல் சிறப்பு பெயர் மாற்றம் முகாம்

வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெறும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

ஜூலை 24 முதல் சிறப்பு பெயர் மாற்றம் முகாம்

author img

By

Published : Jul 21, 2023, 10:28 PM IST

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென 'சிறப்பு பெயர் மாற்றம் முகாம்' ஒன்றினை வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்படும்.

வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 726 ரூபாய் (ரூ 615+GST ரூ 111) செலுத்தி இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வளாகத்தின் விற்பனையின் காரணமாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் (பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை) (அல்லது) நீதிமன்ற உத்தரவு. நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: செட்டில்மென்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும். ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல். நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்: பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள் / குடியிருப்பு வளாகங்கள் / குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின் வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நலவாழ்வு சங்கத்தின் வளாகம், அப்பார்ட்மெண்ட் பெயரில் பதிவு பெயருக்கு சான்றிதழ் மாற்ற (அல்லது) விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம், வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கமலின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' பெயரில் பண மோசடி; சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.