ETV Bharat / state

TANCET 2023: முதுகலை பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - தேர்வு முடிவுகள்

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET - 2023) எழுதிய 36403 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

TANCET - 2023
டான்செட் - 2023
author img

By

Published : Apr 14, 2023, 1:46 PM IST

சென்னை: முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கான (டான்செட் - 2023) எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 20-ந் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25 ந் தேதி காலையிலும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 மாலையில் எழுதினர். CEETA - PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வு மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட் - 2023) பிப்ரவரி 28-ந் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25 ஆம் தேதி காலையில் எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த 9820 மாணவர்களில், 9279 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் சுமார் 541 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை. எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 மாலையில் 24,468 பதிவு செய்ததில், 22,774 மாணவர்கள் எழுதினர். அதிலும் சுமார் 1703 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை.

மேலும் CEETA - PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வினை மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை 4961 பேர் எழுத விண்ணப்பித்த நிலையில், 4350 கலந்துக் கொண்டனர். 611 பேர் தேர்வினை எழுதவில்லை. அதன் பின்னர் தேர்வினை எழுதிய 36,403 மாணவர்களுக்கான முடிவுகள் (ஏப்ரல் 14) இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேலும் இவர்களுக்கான தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்வதுடன், மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் பெயர், முதல் எழுத்து, பிறந்த தேதி, பாலினம், சாதி மற்றும் இருப்பிடம் போன்றவற்றில் திருத்தம் இருந்தால், உரிய ஆதாரங்களுடன் உடனடியாக tanceeta@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் ஒரு முறை மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து விட்டால் மீண்டும் மாற்ற முடியாது" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TNPSC: குரூப்-2 தேர்வை மீண்டும் நடத்தக்கோரி வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.