ETV Bharat / state

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Apr 8, 2022, 4:02 PM IST

சென்னை: 'இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள்(ஏப்ரல் 10) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழ்நாடு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 11,12ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தேவகோட்டை (சிவகங்கை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ, பெரியகுளம் (தேனி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), கடலாடி (ராமநாதபுரம்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), வட்டானம் (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்: உச்சநீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.