சென்னை: கரோனா நோய்த் தொற்றுக் காரணமாக இன்று (டிச.23) 21 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் நேற்று (டிச.22) வரை சிகிச்சை பெற்று வந்த 117 நபர்களில் 15 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோய்த் தொற்றுக் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று வரை 36,10,984 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 35,72,780 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக இதுவரை 38,081 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இன்று (டிச.23) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று கண்டறியும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் 331 இடங்களில் கரோனா ஆய்வகம் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனையை 7 கோடி 9 லட்சத்து 99 ஆயிரத்து 845 நபர்களுக்குச் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் மேலும் கூட்டமான இடங்களில் முககவசம் அணிந்த செல்ல என தமிழக சுகாதாரத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று 52% அதிகரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாகக் இந்தியாவில், கேரளா மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்