தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் இன்று (21/11/2019) காலை பதவியேற்றுக் கொள்கிறார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், ஆர். ராஜகோபாலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று பதவியேற்கும் ஆர். ராஜகோபால் தமிழ்நாடு தலைமை ஆணையராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.
தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலா பிரியா வயது மூப்பு காரணமாக, ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலராக இருந்த ஆர்.ராஜகோபால், தலைமைத் தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
தனியாருக்குத் தள்ளப்படும் 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை முடிவு