தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக, இன்று (செப்.05) முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
![மீனவர்களுக்கான எச்சரிக்கை மீனவர்கள் மழை கனமழை தமிழ்நாட்டில் மழை வானிலை அறிக்கை வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் rain tamilnadu rain update rain update weather report climate tamilnadu rain update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12975528_rain-1.jpg)
தமிழ்நாட்டில் மழை
06.09.2021: வட, உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.09.2021 முதல் 09.09.2021: வட, கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
![மீனவர்களுக்கான எச்சரிக்கை மீனவர்கள் மழை கனமழை தமிழ்நாட்டில் மழை வானிலை அறிக்கை வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் rain tamilnadu rain update rain update weather report climate tamilnadu rain update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12975528_rain.png)
அதிகபட்ச மழை அளவு
வால்பாறை (கோவை), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 5 செ.மீ.
சின்னக்கல்லார் (கோவை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 4 செ.மீ.
மதுக்கூர் (தஞ்சாவூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ.
திருமயம் (புதுக்கோட்டை), சோலையார் (கோவை), திருவாரூர், வேலூர், மேலூர் (மதுரை) தலா 2 செ.மீ.
மதுரை விமான நிலையம், ஓசூர் (கிருஷ்ணகிரி) , திருவள்ளூர் தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வடக்கு, அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக இன்று (செப்.05) வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
![மீனவர்களுக்கான எச்சரிக்கை மீனவர்கள் மழை கனமழை தமிழ்நாட்டில் மழை வானிலை அறிக்கை வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் rain tamilnadu rain update rain update weather report climate tamilnadu rain update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12975528_rain-2.png)
மேலும் இன்றும் (செப்.05), நாளையும் (செப்.06) மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனைத் தொடர்ந்து நாளை (செப்.06) ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதையடுத்து அரபிக்கடல் பகுதியில் இன்று (செப்.05) முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: பள்ளிக்கு வர வேண்டாம்... மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு!