ETV Bharat / state

உள் மாவட்டங்களில் லேசான மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் - 8 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் லேசான மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Feb 6, 2022, 12:53 PM IST

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (பிப்.6) தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

07.02.2022, முதல் 10.02.2022 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'வெயிலோடு விளையாடுவோம்' - சூரிய வெளிச்சத்தின் நன்மைகள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.