சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 730 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்று பாதிப்பினால் 9 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவம்பர் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 752 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 730 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 32 லட்சத்து 38 ஆயிரத்து 152 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 27 லட்சத்து 26 ஆயிரத்து 197 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,291 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 767 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 434 நபர்கள் என அதிகரித்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகளும் என நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 472 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,57,921
கோயம்புத்தூர் - 2,50,070
செங்கல்பட்டு - 1,73,718
திருவள்ளூர் -1,20,181
ஈரோடு - 1,06,252
சேலம் - 1,01,300
திருப்பூர் - 97,106
திருச்சிராப்பள்ளி - 78,429
மதுரை - 75,511
காஞ்சிபுரம் - 75,584
தஞ்சாவூர் - 76,085
கடலூர் - 64,394
கன்னியாகுமரி - 62,772
தூத்துக்குடி - 56,492
திருவண்ணாமலை - 55,182
நாமக்கல் - 53,451
வேலூர் - 50,179
திருநெல்வேலி - 49,645
விருதுநகர் - 46,394
விழுப்புரம் - 46,015
தேனி - 43,605
ராணிப்பேட்டை - 43,554
கிருஷ்ணகிரி - 43,833
திருவாரூர் - 41,862
திண்டுக்கல் - 33,227
நீலகிரி - 34,080
கள்ளக்குறிச்சி - 31,556
புதுக்கோட்டை - 30,325
திருப்பத்தூர் - 29,392
தென்காசி - 27,394
தர்மபுரி - 28,800
கரூர் - 24,605
மயிலாடுதுறை - 23,372
ராமநாதபுரம் - 20,627
நாகப்பட்டினம் - 21,326
சிவகங்கை - 20,388
அரியலூர் - 16,923
பெரம்பலூர் - 12,103
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் : 1,031
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் : 1,085
ரயில் மூலம் வந்தவர்கள் : 428