ETV Bharat / state

தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்

author img

By

Published : Mar 11, 2020, 5:39 PM IST

Updated : Mar 12, 2020, 12:35 AM IST

TamilNadu New Bjp Leader announced  தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமன
தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்

17:28 March 11

தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்திருக்கிறார். முன்னதாக கடந்தாண்டு  தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை, தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் வகித்து வந்த பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி, காலியாக உள்ள நிலையில் முருகன் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத்தலைவராகப் பதவி வகித்து வரும் முருகன், தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், முருகன் சுமார் 15 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பதும் அறியப்பட வேண்டியது.

இதையும் படிங்க:

'மாணவர்களுக்கு பாலினப்பாகுபாடு குறித்த ஆலோசனையைத் தாருங்கள்' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம்

Last Updated : Mar 12, 2020, 12:35 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.