தமிழ்நாடு சரக்கு மற்றும் மினி லாரி சங்கத்தின் கூட்டம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சரக்கு மற்றும் மினி லாரி சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில் தமிழ்நாடு அரசுக்கான சரக்கு சேவையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக அரசுக்கு தேவையான சேவை வசதியை நேர்மையான முறையில் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜேசுதாஸ், செயலாளர் கணேஷ் பங்க் கீரா மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.