ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கை - உயர் கல்வித்துறை சார்பில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் நாளை (செப்.24) கருத்துகளை கேட்க உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வித் துறை சார்பில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்

author img

By

Published : Sep 23, 2020, 9:55 AM IST

Updated : Sep 23, 2020, 10:01 AM IST

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை 2020 அறிமுகப்படுத்தியது. இந்தக் கல்விக்கொள்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. அதிமுக அரசு புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாகவும்; தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020இல் உயர் கல்வித் துறையில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்கு உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா தலைமையில் குழுவை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்தது.

புதிய கல்விக்கொள்கையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு கருத்து தெரிவிக்க சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ். பி.தியாகராஜன், துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித் துறை சார்பில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்
உயர் கல்வித் துறை சார்பில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்

தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா தலைமையிலான உயர் மட்டக்குழு நேற்று (செப் 22.) வீடியோ கான்பெரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை உயர் கல்வித் துறையில் அமல்படுத்துவது குறித்து மாநில அளவில் பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்களின் கருத்துக்களை கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் மூன்று மண்டலங்களில் நாளை(செப் 24) இந்த கருத்துக்கேட்பு நடைபெறவுள்ளது.

அதன்படி சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியில் மற்றும் ஆசிரியர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் காலை 9.30 முதல் 11.30 மணி வரை மாணவர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை பெற்றோர்களிடமும், மதியம் 2. 30 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் காலை 9.30 முதல் 11.30 மணி வரை ஆசிரியர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை மாணவர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை பெற்றோர்களிடமும் கருத்து கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பெண்கள் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் காலை 9.30 முதல் 11.30 மணி வரை பெற்றோர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை ஆசிரியர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை மாணவர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளிலிருந்து 20 முதல் 25 நபர்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள https://www.mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/NEP_Final_English_0.pdf

இதையும் படிங்க: கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த குழுவை கலைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Last Updated : Sep 23, 2020, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.