ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்! - மத்திய அமைச்சர்களை சந்திக்கும் ஈபிஎஸ்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாட்கள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநரைத் தொடர்ந்து இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.

delhi
தமிழ்நாடு
author img

By

Published : Apr 26, 2023, 2:33 PM IST

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற இரண்டு ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோக்களில் முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் குறித்து நிதியமைச்சர் பேசுவது போன்று உள்ளது.

இந்த ஆடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாட்கள் பயணமாக இன்று(ஏப்.26) டெல்லி சென்றுள்ளார். இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து விஸ்தாரா பயணிகள் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநரைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை டெல்லி செல்கிறார். அங்கு, அமித்ஷாவை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் ஈபிஎஸ் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் அதிமுகவின் கட்சிக்கொடியை பயன்படுத்தி திருச்சியில் மாநாடு நடத்தியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஈபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: PTR TAPE 2: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.