அக்டோபர் மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக சீன அலுவலர்கள் தமிழ்நாடு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக, தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் ( செலவீனம் ) சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 அலுவலர்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
வரும் 15 ஆம் தேதி முதல், 21 ஆம் தேதி வரை சீனாவில் இருக்கும் அரசு அலுவலர்கள் பீஜிங், ஃபூட்சோ, ஹாங்காய், உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவுள்ளனர். முக்கியமாக கிரேட்வால் மோட்டார்ஸ், ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி, உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சென்று பார்வையிடவுள்ளனர்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்துவது தொடர்பாகவும் அந்நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: 'நாங்க சீனாதான்... ஆனா, நாங்க வித்த மொபைல் இந்தியாவுல தயாரிச்சது'