சென்னை: தமிழ்நாட்டில் 13 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று(மார்ச் 22) உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த விமலா தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கிய எஸ்பி விமலா, தற்போது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட துணை ஆணையராக இருந்த அரவிந்த் சென்னை நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தியாகராய நகர் துணை ஆணையராக யாரும் நியமிக்கப்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் அகாடமியின் துணை இயக்குநராக இருந்த ஜெயலட்சுமி, சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ரயில்வே ஐஜி ஆக இருந்த கல்பனா நாயக், மின்வாரிய பிரிவு விஜிலன்ஸ் ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 17 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்: 7 பேருக்குப் பதவி உயர்வு!