ETV Bharat / state

கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க ஆலோசனை! - tamilnadu government

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை, தமிழ்நாடு அரசே ஏற்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்க ஆலோசனை

author img

By

Published : May 28, 2021, 3:36 PM IST

தமிழ்நாட்டில் கரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை, அவர்களின் கல்விச் செலவை ஏற்பது எனவும்; அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவது குறித்தும் தமிழ்நாடு அரசு பரீசிலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி தனியார், அரசு கல்லூரிகளில் கலை அறிவியல், பொறியியல் பயிலும் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் விவரங்களையும், அதேபோல தனியார், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெற்றோர்களை இழந்த மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே டெல்லி, கேரளா மாநிலங்களில் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: சென்னையை முந்தியது கோயம்புத்தூர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.