ETV Bharat / state

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு! - இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு
இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு
author img

By

Published : Dec 2, 2021, 4:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

முன்னதாக மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரிசார்ட்டுகளை உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கூறியிருந்தது.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு

இதனைத் துரிதமாகச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியதால், அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனால் நிர்வாக ரீதியாக மாற்றங்களைச் செய்ய அனுமதிவேண்டும் என தமிழ்நாடு அரசு இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு எப்போது? - கடுகடுத்த ஓ.பன்னீர்செல்வம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.