இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, “சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், அமலில் இருக்கும் முழு ஊரடங்குஇன்று இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாளை முதல் முன்னதாக இருந்த ஊரடங்கு தொடரும். அதுமட்டுமின்றி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மறுநாள் முதல் அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...நோய் கண்டறியும் உபகரண தயாரிப்பு மே மாதம் தொடங்கும் - மத்திய அமைச்சர்