தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவகம் என்ற பெயரில் புதிய சட்டம் எந்த மாநிலத்திலும் இயற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும். ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்தச் சட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள், பண இழப்பு ஏற்படாமல் ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்த பண்ணைய சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து இந்தச் சட்டத்தினை முழு செயலாக்கத்திற்கு கொண்டுவருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.