ETV Bharat / state

'மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்க வேண்டும்' - வைகோ - issue the job orders to those passed in Gangman recruitment exam

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு தேர்வானவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மின்சார வாரியம் விரைவில் பணி ஆணை அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மின்சார வாரிய கேங்மேன் பணியாணையை உடனே வழங்கிட வேண்டும் - வைகோ

author img

By

Published : Aug 8, 2020, 3:35 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியானது.

அதன் விளைவாக 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான உடல் தகுதித் தேர்வு 2019 டிசம்பரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 14,949 நபர்கள், 2020 மார்ச் 15ஆம் தேதியில் எழுத்துத் தேர்வு எழுதினார்கள். அதன் முடிவுகள் 2020 மே மாதம் தரவரிசைப் பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் வெளியிட்டு மூன்று மாதங்கள் கடந்தும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படவில்லை.

இல்லாமையாலும், வறுமையாலும் வாடும் அவர்களுடைய நிலைமையை எண்ணி, தகுதி அடிப்படையில் மின்சார வாரியம் விரைவில் பணி ஆணை அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.