தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பணியில் 15 இடங்களும், கூடுதல் பேராசிரியர்கள் பணியில் 27 நபர்களும், உதவிப் பேராசிரியர்கள் 35 பேரும், உதவி நூலகர் பணியில் 3 பேரும், உதவி உடற்கல்வி இயக்குநர் பணியில் 2 நபர்களையும் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வர்கள் விண்ணப்பித்து தங்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் என காத்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டப்பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை தேர்வுச் செய்ய 2020 ஜனவரி 12ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வுக்கட்டணத்தை மீண்டும் விவரங்களை தெரிவித்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் அநீதி இழைத்துள்ளார்' - கனிமொழி