தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 1) புதியதாக 5879 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 இருந்து 1,90,966 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (ஆகஸ்ட்1) ஒரே நாளில் 99 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,034 ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனா
மாவட்டம் | பாதித்தோர் எண்ணிக்கை |
---|---|
அரியலூர் | 950 |
செங்கல்பட்டு | 14866 |
சென்னை | 100877 |
கோவை | 5059 |
தருமபுரி | 770 |
கடலூர் | 3271 |
திண்டுக்கல் மாவட்டம் | 2893 |
ஈரோடு மாவட்டம் | 732 |
கள்ளக்குறிச்சி மாவட்டம் | 3807 |
காஞ்சிபுரம் மாவட்டம் | 9384 |
மதுரை | 11175 |
நீலகிரி | 802 |
நாமக்கல் | 778 |
ராணிப்பேட்டை | 5300 |
ராமநாதபுரம் | 3293 |
புதுக்கோட்டை | 2258 |
பெரம்பலூர் | 497 |
கன்னியாகுமரி | 4891 |
கரூர் | 532 |
நாகபட்டினம் | 772 |
கிருஷ்ணகிரி | 1042 |
சேலம் | 3670 |
தென்காசி | 2210 |
தஞ்சாவூர் | 2915 |
தேனி | 5355 |
திருப்பத்தூர் | 1167 |
சிவகங்கை | 2426 |
திருவாரூர் | 1738 |
திருவண்ணாமலை | 6304 |
திருவள்ளூர் | 14128 |
தூத்துக்குடி மாவட்டம் | 7350 |
திருச்சி | 4282 |
திருப்பூர் | 909 |
திருநெல்வேலி | 5393 |
விருதுநகர் | 8151 |
விழுப்புரம் | 3923 |
வேலூர் | 6069 |
கரோனா பாதித்த பயணிகள் விவரம்
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 821 பேர்
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 603 பேர்
- ரயில் மூலம் வந்தவர்கள் 425 பேர்