சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 772 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து 1,587 நபர்கள் புதிதாக கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 26 லட்சத்து 91 ஆயிரத்து 338 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 26 லட்சத்து 27 ஆயிரத்து 375 பேர் கரோனா தொற்று பாதிப்பு அடைந்தனர். அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 180 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,594 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவரின் எண்ணிக்கை 25 லட்சத்து 76 ஆயிரத்து 112 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகளும் என 18 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 73 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,45,526
கோயம்புத்தூர் - 2,37,863
செங்கல்பட்டு - 1,66,242
திருவள்ளூர் - 1,16,357
சேலம் - 96,596
திருப்பூர் - 90,982
ஈரோடு - 99,312
மதுரை - 74,127
காஞ்சிபுரம் - 73,129
திருச்சிராப்பள்ளி - 74,814
தஞ்சாவூர் - 71,512
கன்னியாகுமரி - 61,161
கடலூர் - 62,635
தூத்துக்குடி - 55,577
திருநெல்வேலி - 48,534
திருவண்ணாமலை - 53,629
வேலூர் - 48,969
விருதுநகர் - 45,809
தேனி - 43,247
விழுப்புரம் - 45,001
நாமக்கல் - 49,349
ராணிப்பேட்டை - 42,683
கிருஷ்ணகிரி - 42,234
திருவாரூர் - 39,314
திண்டுக்கல் - 32,550
புதுக்கோட்டை - 29,279
திருப்பத்தூர் - 28,669
தென்காசி - 27,150
நீலகிரி - 31,986
கள்ளக்குறிச்சி - 30,330
தருமபுரி - 27,022
கரூர் - 23,221
மயிலாடுதுறை - 22,192
ராமநாதபுரம் - 20,230
நாகப்பட்டினம் - 19,870
சிவகங்கை - 19,502
அரியலூர் - 16,457
பெரம்பலூர் - 11,772
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1023
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1082
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க : ஒரே இணைப்பில் இம்மூன்றும் - மத்திய அரசுடன் கைக்கோத்த திமுக அரசு