தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,000யை நெருங்கி வருகிறது. இன்று மட்டும் 743 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் நோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் குறித்த தகவலில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை ஆய்வகங்கள் 63ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 40 அரசு, 23 தனியார் ஆய்வகங்களில் 11,894 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 743 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 13,191 பேர் இந்த நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 986 பேர் இன்று பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,882 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தனிமைப்படுத்தும் மையங்களில் 5,059 பேர் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற மூவருக்கு சிகிச்சை பலன் அளிக்காததால் இன்று உயிரிழந்தனர் . இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 8,828 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
- சென்னை -8,228
- செங்கல்பட்டு -621
- திருவள்ளூர் -594
- கடலூர் -420
- அரியலூர் -355
- விழுப்புரம் -318
- திருநெல்வேலி -242
- காஞ்சிபுரம் -223
- மதுரை -172
- திருவண்ணாமலை -166
- கோயம்புத்தூர் -146
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -127
- தூத்துக்குடி -113
- திருப்பூர் -112
- கள்ளக்குறிச்சி -112
- தேனி -92
- ராணிப்பேட்டை -84
- கரூர் -79
- நாமக்கல் -76
- தஞ்சாவூர் -76
- ஈரோடு -70
- தென்காசி -75
- திருச்சிராப்பள்ளி -68
- விருதுநகர் -61
- நாகப்பட்டினம் -51
- சேலம் -49
- கன்னியாகுமரி -49
- ராமநாதபுரம் -39
- வேலூர் -34
- திருவாரூர் -32
- திருப்பத்தூர் -29
- சிவகங்கை -26
- கிருஷ்ணகிரி -21
- நீலகிரி -13
- புதுக்கோட்டை -13
- தருமபுரி -5