ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,896 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1,896 பேருக்கு கரோனா பாதிப்பு...

author img

By

Published : Aug 15, 2021, 7:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 57 ஆயிரத்து 587 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,896 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் 3 கோடியே 98 லட்சத்து 3 ஆயிரத்து 533 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 781 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று (ஆக. 15) பாதிக்கப்பட்ட 1,896 நபர்களில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 225 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக சென்னையில் 216 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தமாக 49 லட்சத்து 49 ஆயிரத்து 336 நபர்கள் பல்வேறு வாகனம் மூலம் தமிழ்நாடு வந்து உள்ளனர். இதில் 8,667 நபர்கள் மட்டுமே கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா சிகிச்சையில் இருக்கும் 20,458 பேர்

தொற்று உறுதியானவர்களில் இன்றைய நிலவரப்படி, 20 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனைகள், தனிமைப்படுத்துதல் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 23 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தினசரி கரோனா பாதிப்பு: இந்தியாவில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு தொற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.