சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 387 நபர்களுக்கு ஆர்டிபி-சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த இரண்டாயிரத்து 455 நபர்களுக்கும், ஜார்கண்டிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், பிகாரிலிருந்து வந்த ஒருவருக்கும் என இரண்டாயிரத்து 458 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 197 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 26 ஆயிரத்து 401 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 30 ஆயிரத்து 600 பேர் பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மூன்றாயிரத்து 21 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 62 ஆயிரத்து 244 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 16 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 39 நோயாளிகளும் என 55 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 557 என உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூரில் புதிதாக 207 நபர்களுக்கும், ஈரோட்டில் 175 நபர்களுக்கும், சேலத்தில் 164 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 171 நபர்களுக்கும், திருப்பூரில் 146 நபர்களுக்கும், சென்னையில் 153 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 131 நபர்களுக்கும் என இந்த மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை : 5,35,588
கோயம்புத்தூர் : 2,25,889
செங்கல்பட்டு : 1,59,770
திருவள்ளூர் : 1,12,275
சேலம் : 91,371
திருப்பூர் : 86,044
ஈரோடு : 91,472
மதுரை : 73,087
காஞ்சிபுரம் : 70,990
திருச்சிராப்பள்ளி : 71,215
தஞ்சாவூர் : 66,102
கன்னியாகுமரி : 59,546
கடலூர் : 59,180
தூத்துக்குடி : 54,764
திருநெல்வேலி : 47,481
திருவண்ணாமலை : 50,936
வேலூர் : 47,506
விருதுநகர் : 45,165
தேனி : 42,698
விழுப்புரம் : 43,261
நாமக்கல் : 46,205
ராணிப்பேட்டை : 41,564
கிருஷ்ணகிரி : 40,844
திருவாரூர் : 37,332
திண்டுக்கல் : 31,890
புதுக்கோட்டை : 27,658
திருப்பத்தூர் : 27,879
தென்காசி : 26,641
நீலகிரி : 29,625
கள்ளக்குறிச்சி : 28,231
தருமபுரி : 25,539
கரூர் :22,399
மயிலாடுதுறை : 20,590
ராமநாதபுரம் : 19,841
நாகப்பட்டினம் : 18,213
சிவகங்கை : 18,365
அரியலூர் : 15,422
பெரம்பலூர் : 11,313