தமிழ்நாட்டில் இன்று மேலும் 2 ஆயிரத்து 865 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 814ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 763ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனாவால் 33 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 866ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாநகரில் 1000 ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு