தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் அவசர தேவைக்காக காவல்துறையை தொடர்புகொள்ள 100 மற்றும் 112 ஆகிய எண்களை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பொதுமக்கள் 100 மற்றும் 112 எண்களை அவசர தேவைக்காக அழைக்கும்போது காவல் கட்டுப்பாட்டு அறையில் இணைப்பை பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், தற்போது பொதுமக்கள் அவசர தேவைக்காக காவல் துறையினரை தொடர்புகொள்ள தற்காலிகமாக 044 -71200100,044 - 46100100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு காவல் துறை அறிவித்து உள்ளது.
இதையும் படிங்க: பெண் சிசுக் கொலையை தடுக்க புதிய செயலி - மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு பேட்டி