தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்துவதில் மும்முரம் காட்டிவந்த திமுக, முதல்கட்டமாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தலைமைக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி. ஜெயக்குமார், காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவர்களைத் தொடர்ந்து இன்று மாலை மதிமுக சார்பில் வைகோ, விசிக சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக ஒதுக்கும் இடங்களில் மதிமுக போட்டி - வைகோ