ETV Bharat / state

‘இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகள்’- கே.எஸ். அழகிரி - பக்ரீத் வாழ்த்து

மத கோட்பாடுகளை போற்றிப் பாதுகாத்து வரும் இஸ்லாமிய சகோதரர்களை வாழ்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, பக்ரீத் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி
author img

By

Published : Jul 20, 2021, 12:16 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, பக்ரீத் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடும் பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்.

ஒன்றிய பாஜக அரசு இந்துத்வா கோட்பாடுகளைப் பின்பற்றி, அனைத்து நிலைகளிலும் புகுத்துவதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல் நடைபெற்று வருகிறது. சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

மதச்சார்பற்ற சக்திகள்

சம உரிமை, சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைவரும் சமமாக பெறுவதே மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

பக்ரீத் வாழ்த்து செய்தி
பக்ரீத் வாழ்த்து செய்தி

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆம்பூரில் பக்ரீத் தொழுகைக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.