ETV Bharat / state

’புதிய கல்விக் கொள்கையை உயிரைக் கொடுத்து தடுப்போம்’

சென்னை: புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் உயிரைக் கொடுத்து அதனை தடுப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

Tamilnadu congress committee president ks alagiri pressmeet
author img

By

Published : Nov 2, 2019, 10:44 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரி சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவையே புரட்டிப்போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்திலிருந்து விடுதலை செய்வது மாபெரும் குற்றம். இந்தியாவைச் சேர்ந்த பெண் சமுதாயம் அவர்களை மன்னிக்காது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்பட்ட பிரச்னைகளை விட பொள்ளாச்சி வழக்கு மிகவும் கொடூரமானது. இதில் முக்கியமான தலைவர்களும், அவர்களின் பிள்ளைகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அரசு இவ்வழக்கில் கவனக்குறைவாக செயல்படுவது தவறு. புதிய கல்விக் கொள்கை என்பது தரம், தகுதி ஆகிய வார்த்தைகளை கொண்டு இந்நாட்டின் சமூகநீதியை சீரழிப்பதற்கும், ஏழை, எளிய தொழிலாளிகளின் குடும்பத்திலிருந்து படிக்கும் மாணவர்களை வடிகட்டுவதற்கும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி

கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வும், பின்னர் நீட் தேர்வும் வைத்தால் மீண்டும் அவர்கள் குலத்தொழில்தான் செய்யமுடியும், கல்வியைப் பயிலவே முடியாது. தகுதி, திறமை போன்றவற்றை கூறி குலத்தொழிலை மறைமுகமாக வலியுறுத்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆரம்ப கொள்கையாகும். காமராஜர், பெரியார் போராடி பெற்ற கல்வி, சமூகநீதியை குழி தோண்டி புதைக்கின்ற செயலை அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் பெயரை கொண்டுள்ள அதிமுக செய்யக் கூடாது. அப்படி செய்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது அதைத் தடுப்போம்.

ரஜினிகாந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தகுதியானவர். அவருக்கு எந்த விருது வந்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம். ரஜினியுடன் அரசியல் ரீதியாக சில விஷயங்களில் நாங்கள் மாறுபடுகிறோமே தவிர, அவருடைய திறமை, தகுதி, பெருந்தன்மை ஆகியவற்றில் மாறுபாடு கிடையாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ‘காந்தியின் கொள்கைதான் காங்கிரசின் பலம்’ - கே.எஸ். அழகிரி பெருமிதம்!

Intro:தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

தமிழக அரசாங்கத்திற்கு எதிர்மறையாக மட்டுமே செயல்பட தெரிகிறது பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்பது இந்தியாவையே புறட்டிபோட்ட வழக்கு ஆகும் அந்த வழக்கில் ஏறாளமான பெண்களை சீரழிக்கப்பட்டு இருக்கின்றனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்வது மாபெரும் குற்றம் ஆகும் இவர்களை தமிழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பெண் சமுதாயம் அவர்களை மன்னிகாது என்று கூறினார்

வடஇந்தியாவில் நிரபியா கற்பழிப்பு வழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகளை விட பொள்ளாச்சி வழக்கும் மிகவும் கொடுரமானது ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் இதில் முக்கியமான தலைவர்களின் கும்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது அவர்களின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் இதில் அரசாங்கம் கவனக்குறைவாக செயல்படுவது தவறு எனவும் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தவறு எனவும் வன்மையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டிக்கிறது என கூறினார்

புதிய கல்விக் கொள்கை என்பது தரம் மற்றும் தகுதி என்ற ஒரு வார்த்தையை வைத்து இந்த நாட்டில் சமூகநீதியை சீரழிப்பதுருக்கும் ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தின் தொழிலாளிகளின் குடும்பத்திலிருந்து படிகக்கும் மாணவர்களை வடிகட்ட செய்கின்ற ஒரு தவறான செயலாகும்

தகுதி திறமை என்பது ஆர்எஸ்எஸ்-ன் ஆரம்ப கொள்கை கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் டான் பாஸ்கோ அளவிற்கு திறமையாக படிக்க வைக்க முடியாது எனவே அவர்களுக்கு5,8,10,11,12 மற்றும் ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வு மற்றும் நீட் என்கிற தேர்வு வைத்தால் மீண்டும் அவர்கள் குலத்தொழில் தான் செய்யமுடியும் கல்வியைப் பயிலவே முடியாது. காமராஜர்,தந்தை பெரியார் போராடிய கல்வி,சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கின்ற செயலாகும் ஆனால் அண்ணா எம்ஜிஆர் பெயரை சொல்லும் அதிமுக இது போன்ற கொடிய காரியத்தைச் செய்யக் கூடாது அப்படி செய்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது அதை தடுப்போம் என தெரிவித்தார்

நீட் தேர்வை காங்கிரஸ் திமுக கொண்டுவந்தாக கூறும் அமைச்சர் ஜெயக்குமார் அதை நீக்கி விட்டு போக வேண்டியதுதானே திமுக காங்கிரஸ் கொண்டுவந்த எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வீர்களா ஜிஎஸ்டி திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது வேறு ஆனால் தற்போது வந்துள்ள ஜிஎஸ்டி வேறு அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்பாக பதில் சொல்லவேண்டும் திமுக காங்கிரஸ் கொண்டு வந்தது வேறு இவர்கள் நடைமுறைப்படுத்தியது என்று தெரிவித்தார்

மருத்துவர்கள் போராட்டம் நடத்தினாலும் மருத்துவமனைகளை செயல்பட வைத்தனர் எந்த கோரிக்கை நியாயமோ அதை நிறைவேற்ற வேண்டும் தவிர மிரட்டக் கூடாது ஜனநாயகத்தில் போராடுகின்ற உரிமை உள்ளது அதை தடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்

ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தகுதியானவர் அவருக்கு எந்த விருது வந்தாலும் தமிழக காங்கிரஸ் வரவேற்கும் ரஜினியுடன் அரசியல் ரீதியாக சில விஷயங்களில் மாறுபடுயிருகிறது தவிர அவருடைய திறமை தகுதி பெருந்தன்மை ஆகியவற்றில் மாறுபடு கிடையாது அரசு கவுரவித்தால் வரவேற்க்ககூடிய ஒன்று இவ்வாறு அவர் கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.